இதற்கு யோகா உபயோகமாக இருக்குமா?
கேள்வி : எனக்கு 38. நான்கு குழந்தைகள். என் அறியாமையால் 6 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். பின்னர் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனும் செய்து கொண்டேன். எனக்கு சிறுநீர் போகும் இடத்தில் குண்டாக என்னமோ தெரிந்தது. மருத்துவர், கருப்பை நன்றாக உள்ளதென்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி லூசாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால், என் தாம்பத்தியம் பாதிக்கப்பட்டுள்ளது. கணவரின் புறக்கணிப்பால் மனம் நொந்திருக்கிறேன். இதற்கு யோகா உபயோகமாக இருக்குமா?
பதில் : இதற்கு அடி இறங்குதல் என்று பெயர். அதாவது உள்ளே இருக்கவேண்டிய கர்ப்பப்பையின் வாய் வெளியே தெரியும். கர்ப்பப்பை வாயை கருவிபோட்டு இழுத்துத்தான் கருக்கலைப்பு செய்திருப்பார்கள். அதனால் நேர்ந்தது இது. கஷ்டமான டெலிவரியாக இருந்தாலும் இப்படி நேரலாம். இருமினால் கூட கீழே வந்துவிடும் சிலருக்கு.
பொதுவாக ஒரு ரிங்போட்டு உள்ளே தள்ளுவோம். இந்த ரிங்கை அடிக்கடி எடுத்து சுத்தப்படுத்த வேண்டும். உள்ளேயே வைத்து தைத்துவிடலாம்.
இதைச் சரி செய்ய ஒரு நல்ல பயிற்சியுண்டு. நீங்கள் யூரின் போகும்போது அடக்கி அடக்கிப் போங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது பத்துமுறை இப்படி ரெகுலராக செய்தால் மீண்டும் அப்பகுதி சுருங்கி விரியும் தன்மையை அடைய அதிகம் வாய்ப்புண்டு.
இதற்கு யோகா உபயோகப்படுமோ என்று தெரியவில்லை. ஒரு வேளை. அந்த பெல்விக் ஏரியாவின் தொய்வை சரிசெய்கிற பயிற்சி யோகாவில் இருந்தால் நிச்சயம் பலன் தரும்.
தாம்பத்யம் பாதிக்கப்பட்டதால் கணவர் புறக்கணிப்பதாக நீங்கள் சொல்லியிருப்பது வேதனை தருகிறது. துக்கம், சந்தோஷம் இரண்டிலும் துணை இருப்பதுதான் துணைவருக்கு அழகு.
|
இந்த முத்தத்தினால் எய்ட்ஸ் வருமா?
‘வாயோடு வாய் வைத்து வைத்து தரும் ‘பிரெஞ்சு கிஸ்’ ஆபத்தானது அல்ல. அதனால் எய்ட்ஸ் வராது. ஆனால் இருவரில் யாருக்காவது வாயில் வெடிப்பு, சிதைவு இருந்தால், கோளாறு ஏற்படலாம்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
எய்ட்ஸ் மோசமான நோய் என்பது உண்மைதான் என்றாலும், அது ஏற்படுவது பற்றிய சந்தேகங்கள் எல்லாம் இப்போது வெகுவாக நீங்கி விட்டன. எல்லோருக்கும் ஓரளவு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அரசு அமைப்புகள் பிரச்சாரம் தீவிரமாக இருப்பதால் மக்களிடம் விழிப்புணர்வு காணப்படுகிறது. டில்லியில் மருத்துவ ஆய்வில் தெரியவந்த விவரம் வருமாறு: பொதுவாக முத்தம் தருவதால், அதிலும் வாயோடு வாய் வைத்து உதட்டோடு தரப்படும் முத்தத்தால் எந்த பாதிப்பும் வராது. வெடிப்பு போன்ற சிறு காயம் இருந்தால் கூட பாதிப்பு வரலாம். அதனால் டாக்டரிடன் காட்டி பரிசோதித்துக்கொள்வதுதான் நல்லது. பிரெஞ்சு கிஸ் எனப்படும் முத்தத்தை பொறுத்தவரை எந்த ஆபத்தும் கிடையாது. மனிதனுக்கு பசி எடுப்பது போல, செக்ஸ் பசி, இருபாலருக்கும் உண்டு. செக்ஸ் என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரின் டேஸ்ட்டை பொறுத்தது. ஒவ்வொருவரின் டேஸ்ட், அணுகுமுறை மாற்றம் உள்ளவை. தம்பதிகளைப் பொறுத்தவரை சிலர். ஒரு நாளைக்கு இருமுறை கூட உறவு கொள்வர். சில தம்பதியரோ, மாதத்துக்கு ஒரு முறை உறவு கொள்வது கூட அரிதாக இருக்கும்.
அவரவர் மகிழ்ச்சியை பொறுத்துத்தான் செக்ஸ் உறவு கொள்கின்றனர். சிலர் மாதக்கணக்கில் இடைவெளிவிட்டு செக்ஸ் உறவு கொண்டாலும், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையாது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் உறவு வைத்துக்கொள்வர்.
ஆனாலும் பெரும்பாலானோரின் பொதுவான எண்ணம், செக்ஸ் என்பது தமக்கு போதுமான அளவில் இல்லை என்பது தான். தாங்கள் உறவு கொள்வதும் போதுமானதாக இல்லை. அடிக்கடி தேவைப்பட்டும் தங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறது என்றும் நினைக்கத்தான் செய்கின்றனர். இப்படிபட்ட செக்ஸ் உறவில் தம்பதியை பொறுத்தவரை எந்த பாதிப்பும் கிடையாது. முறை தவறிய, தவறான பழக்கங்களுடன் கூடியவருடன் தவறான உறவு கொள்ளும் போது தான் எய்ட்ஸ் பொன்ற பாதிப்பு வருகிறது. வாய்ப்புணர்ச்சி மூலம் எய்ட்ஸ் கிருமி பரவுகிறதா இல்லையா என்பது இன்னும் ஆய்வு அளவில் தான் உள்ளது. அதனால், வாய்ப்புணர்ச்சி தொடர்பாக முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்டு அனுபவிப்பது நல்லது. வாய்ப்புணர்ச்சி கொள்ளும்போது, சில முன்னெச்சரிக்கைகள் நிச்சயம் தேவை. இல்லாவிட்டால், எய்ட்ஸ் கிருமி பாதிக்க குறைந்த அளவில் வாய்ப்பு உண்டு. அது மட்டுமின்றி, வேறு சில பிரச்சனைகளும் வரலாம். குறிப்பாக ஹெபடைட்டி ஏ, பி மற்றும் சி வர வாய்ப்புண்டு என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த விஷயத்தில் ஆண்கள் வீக்
‘அது’ல ஆண்மகன்கள் பெரும்பாலோர் சரியில்லையாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.
செக்ஸ் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் வாழ்க்கையில், வாழ்வில் கணவன் மனைவி இடையே பல வகையில், இணக்கத்தை ஏற்படுத்துகிறது. சீரான வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது. உடல் ஆரோகியத்துக்கும், மன வலிமைக்கும் உதவுகிறது என்பதெல்லாம் டாக்டர்களின் கருத்து.
பழங்கால சீனாவை பொறுத்தவரை, ரொம்பவும் கட்டுப்பட்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். செக்ஸ் விஷயத்தில் கூட, அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்துள்ளனர். இப்போது சீனப் பெண்களின் செக்ஸ் தாகம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. அவர்களின் செக்ஸ் தாகத்தை தீர்க்கும் அளவுக்கு பெரும்பலான சீன ஆண்களால் முடியவில்லை என்று கூறுகிறது.
சீன மருத்துவ சங்கமும், சீன செக்ஸ் அறிவியல் கழகமும் இணைந்து சமீபத்தில் வித்தியாசமான சர்வே எடுத்தது. அதில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்வே எடுத்ததில் 54.2 சதவீதம் பெண்களுக்கு, திருமணத்துக்குப் பின்னர் செக்ஸ் என்பது பெரிதும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அது நிச்சயம், முழுமையாக தேவை என்றும் கருதுகின்றனர். அதில் 25 சதவீதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செக்சை பொறுத்தவரை, சீனப்பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் கணவர்களால் செக்ஸ் பிரச்னை இருக்கிறது. போதுமான அளவில் திருப்தி இல்லாமல் தான் திருமண வாழ்க்கையில் செக்சை அனுபவிக்கின்றனர். பல துறைகளில் நாட்டம் செலுத்தி, முன்னேறி வரும் சீனா, செக்ஸ் விஷயத்தில் எப்போதும் சோடை போனதில்லை. அதனால் தான் ஜனத்தொகையும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஆனாலும், நீடித்த செக்ஸ் வாழ்க்கையில் சீனப்பெண்களுக்கு குறை இருக்கிறது என்பது இப்போது தான் மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.
இது பற்றி சீன செக்ஸ் மருத்துவ கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் சர்வே எடுத்து, சீன தம்பதிகளின் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேற்கத்திய கலாச்சார பாதிப்பு இருக்கும் நிலையில், சீனர்கள் மனப்போக்கு மாறியிருக்கும் அளவுக்கு, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பது என்பது மருத்துவ உலகில் புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக செக்ஸ் விஷயத்தில் இருப்பதும் அவர்களை திகைப்படையச் செய்துள்ளது. செக்ஸ் விஷயத்தில் உரிய அணுகுமுறைகளை கையாள, கணவன்மார்களுக்கு ஆலோசனையும் கூறலாம் என்றும் செக்ஸ் மருத்துவக் கழகம் யோசித்து வருகிறது.
|
 |
|