பாலியல் சந்தேகங்கள்
வாழ்க்கையை வளைக்கும் லிங்க வளைவு
ஆணின் பாலுறுப்பான லிங்கத்தில் ஏற்படும் வளைவை 1743ல் பிரெஞ்ச் நாட்டின் பிரான்சுவா தெலா பைரோலி என்பவர் கண்டுபிடித்துக் கூறிய காரணத்தினால் இந்த வியாதியின் பெயரும் அவருடைய பெயரும் அவருடைய பெயரோடு ஒட்டி பைரோனி வியாதி என்று அழைக்கப்படுகிறது.
வியாதியின் மூலக்காரணங்கள்
வயது வரம்பு: பொதுவாக இந்த லிங்கவளைவு என்னும் சிரமான வியாதி முப்பத்தைந்திற்குப் பிறகும் எழுபது வயதிற்கு கீழேயும் உள்ள ஆண்களின் பாலியல் உறுப்பான லிங்கத்தை வளைத்து சிக்கலாக்குகின்ற முறை உலக அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பொதுவாக ஓர் ஆண் மகனின் ஐம்பது வயதிற்குப் பிறகும் வயதாகிய முதுமை நிலைக்கு முன்பாகவும் உள்ள வயதின் நடுநிலைப்பகுதியின் பின்பகுதியின் பின்பகுதியில் உள்ள ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.
பரம்பரையும் வியாதியும்: பொதுவாக இது பரம்பரை வழியாக வருகின்ற வியாதியாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் அடுத்தடுத்து சகோதர்களைத் தாக்குகின்ற நிலைமை ஏற்பட்டதை மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ளது.
காயம் இணைந்த வளைவுத்தன்மை: லிங்கத்தின் விரைப்புத்தன்மைக்குக் காரணமான இருபக்கமும் அமைந்துள்ள சதைப்பகுதி காயம் அடைவதாலும் விரல் விடுவதாலும் இப்படிப்பட்ட ஒருநிலை உண்டாவதைத் தடுக்கமுடியாது. ஆனால், சில நேரங்களில் தூக்கத்திலோ அல்லது உடலுறவுகொள்கின்ற நேரங்களிலோ இப்படி ஏற்படுகின்ற சதை வீரல் அல்லது காயம் நாளடைவில் இந்த வியாதிக்கு அடிப்படையாக அமைவதுண்டு. சில நேரங்களில் இந்த அவல நிலை ஏற்படாமல் சீரடைவதும் உண்டு.
சிறுநீர்த் தாரை அழற்சி, பாலியல் வியாதிகள் மற்றும் லிங்க் வளைவு: செஸ்னியம், பர்காடும் தங்களுடைய ஆய்வில் வாழ்க்கையின் ஒழுக்க முறையில் தவறுகின்ற ஆண்களை ஆய்வுசெய்து பாலியல் நோய்கள் மற்றும் கிருமிகளின் அழற்சிகள் இப்படிப்பட்ட நிலையை உருவாக்குவதை கணித்துள்ளார்கள்.
லிங்க இரத்த குழாய் அடைப்பும் அதன் வளைவும்: ஆணின் பாலுறுப்பான லிங்கத்தை இரத்தக்குழல்களான தமனியும் சிறையும் மிக அளவு கடந்து இருப்பதோடு சில நேரங்களில் இரத்த உறைவு ஏற்பட்டு அந்த உறை சிறைகளில் அடைப்பை ஏற்படுத்துவதுண்டு. இந்த அடைப்பால் ஏற்படும் தடையும் தடிப்பும் நாலடைவில் ஒரு சுருக்கத்தையும் வளைவையும் லிங்கத்தில் ஏற்படுத்துவதுண்டு. இதுவே இணைந்துள்ள விரைப்பில் சதைப் பகுதியைத் தாக்கி அதற்குரிய செயலை சீர்கெடவைத்து இப்படிப்பட்ட லிங்க வளைவை ஏற்படுத்துவதுண்டு.
மற்ற காரணங்களும், லிங்க வளைவும்: நீண்ட ஆராய்ச்சியில் இதைப்போன்ற சதை மாற்றங்கள் எப்படி லிங்க வளைவை ஏற்படுத்துகின்றதோ அதைப்போன்று உடம்பில் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாக்குவதைக் கண்டுபிடித்துள்ளார்கள். கைகளில், நம்முடைய ஐந்து விரல்கள் இணைந்துள்ள உள்ளங்கையோடு தொடர்கின்ற மணிக்கட்டுப் பகுதியில் இப்படிப்பட்ட சதைச் சிதைவும் சதைச் சுருக்கமும் சதை நெருக்கமும் ஏற்பட்டு கைகளில் மணிக்கட்டிற்குரிய நீட்டி மடக்கும் தன்மை பாதிக்கப்பட்டு ஒருவித ஊன நிலை ஏற்படுவதுண்டு. இதனால் மணிக்கட்டு கீழ்ப்புறமாக வளைந்து மேல்நோக்கி நீட்ட முடியாத ஒரு நிலையில் பாதிக்கப்பட்டவர் சிரமப்படுவது உண்டு. இந்த நிலையில் துன்பப்படும் சிலருக்கு லிங்கத்தில் ஏற்படும் வளைவை பைரோனி வியாதி என்று கூறுவது போன்று இந்த மணிக்கட்டில் ஏற்படும் வளைவை டெட்பூட்ரியன் என்பவரின் பெயரோடு இணைந்து டெப்பூட்டிரியன் வளைவு என்று கூறிகிறோம். இதே போன்ற மாற்றங்கள் சிறுநீரகத்திலிருந்து கீழ்நோக்கி வருகின்ற சிறுநீர்க் குழாய்களை சுற்றியுள்ள சதைகளில் ஏற்பட்டு அங்கே சிறுநீர்த்தேக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதேபோன்று சிலருடைய தோலில் ஏற்படுகின்ற சிறிய காயங்கள் பெரிய வடுக்களாக மாறி அழகைக் கெடுப்பதும் உண்டு. இப்படிப்பட்ட வியாதிகள் பலநேரங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல சகோதர சகோதிரிகளைப் பாதிப்பதும் உண்டு.
நோயின் தன்மை: பொதுவாக ஆணினுடைய பால் உறுப்பான லிங்கத்தின் அதுவும் மேல்பகுதியில் உள்ளே கட்டி போன்றும் மேலே அதை இணைக்கின்ற தோல்உருமாறியும் வடுபோன்றும் காட்சியளிக்கும். அதைத் தொட்டுப்பார்க்கின்ற பொழுது அந்த இடத்தில் உள்ள சதையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மிக நன்றாக உணரலாம். முன்பு கூறியதைப் போன்றே விரைப்புத்தன்மைக்கு உரிய இரண்டு பகுதிகளாக உள்ள நீண்ட சதை நார்கள் அதற்குரிய தன்மை இழந்து நார் போன்ற செல்களின் கூட்டத்தினால் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தி மஞ்சை போன்று சதைகள் உருமாறி, வறண்டு சுருங்கி அந்த சதைக்குரிய இயற்கையான தன்மையை அழித்து இவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் லிங்கம் வளைகின்ற ஒரு நிலையை உண்டாக்கிவிடுவதே கண்கூடாகும். இதற்கு உரிய காரணம்தான் என்ன? ஆய்வு செய்த மருத்துவ உலக நிபுணர்கள் அவர்களுக்கு உரிய நிலையில் சில காரணங்களை காட்டினார்கள் என்றாலும் இன்னும் ஒரு முடிவான காரணத்தை கூற இயலவில்லை. ஒரு சில மருத்துவர்கள் ஆய்வு செய்து கூறுகின்றபோழுது சிறுநீர்த் தாரையில் ஏற்படும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் அழற்சியுறும் சிறுநீர்த்தாரையில் மற்றும் அதனுடைய சுற்றுப்புறமுமே இதற்குக் காரணம் என்று கூறுகின்றார்கள். மேலும், இந்த நுண்கிருமிகள் கூட பாலியல் வியாதியில் சம்பந்தப்பட்ட நுண்கிருமிகளின் தாக்கமே அதிக அளவில் இப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்குகிறது என்பது இவர்களுடைய வாதம். ஆனால், இந்தக் கருத்துக்கு எதிர்மறையானவர்களும் உண்டு. அவர்கள் கூறுவது என்னவென்றால் சிறுநீர்த்தாரையில் ஏற்படும் நுண்கிருமிகளின் தாக்கம் அதைச் சுற்றியுள்ள சதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சில தடையான சதைகளைத் தாண்டியிருக்கின்ற உணர்ச்சியூட்டும் சதையை எப்படிப் பாதிக்கும்?
இது ஒரு நல்ல வாதமே, எப்படியிருந்தாலும், இந்த மாற்றத்தினால் அந்த சதையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு வேறு நார் போன்ற சதைகளால் நல்ல சதைகள் மாற்றப்பட்டு நாளடைவில் ஒரு எலும்பிற்குரிய குணத்தை உண்டாக்கக்கூடிய சதை மாற்றம் உண்டாவது கண்கூடு. இதேபோன்ற நிலைதான் கையின் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் வளைவு நிலைக்கும் காரணமாகும். ஒரு முக்கியமான ஆய்வு என்னவென்றால் இந்த சதை மாற்றம் ஆண் லிங்கத்தின் மற்ற பகுதிகளைவிட மேல்புறப்பகுதியையே அதிகம் பாதிக்கிறது.
நோய் வெளிப்பாடு:
1. லிங்கத்தில் ஏற்படும் ஊனம் மற்றும் வளைவு.
2. கட்டி போன்ற உணர்வு.
3. வலி, குறிப்பாக விரைப்பு ஏற்படும் பொழுதும், உடல்உறவு கொள்ள நினைக்கும் பொழுதும்.
4. பேடித்தன்மை.
இந்தக் கடைசி நிலை ஏற்படுவதற்குக் காரணம் லிங்கத்தில் ஏற்படும் வலியும் அந்த வளைவும் நாளடைவில் பெண் பாலியல் உறுப்போடு இணைய முடியாத அவல நிலை ஏற்படுவதால் தான். லிங்கம் கல்போன்றும் எலும்பு போன்றும் மாறி லிங்கம் வளைந்துவிடுவதால் இந்த நிலை ஏற்பட்டு ஒரு ஆண் பேடிமைக்கு ஆளாகின்றான்.
சிகிச்சையில்லா நிலையில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள்: உலகின் சில மருத்துவ நிபுணர்கள் இந்த வியாதி எந்த வித சிகிச்சைமுறையும் இல்லாமலேயே நாளடைவில் மறைந்துவிடுவதாகக் கூறியுள்ளார்கள். ஆனால், எங்கோ ஒரு சில விதிவிலக்கான நிகழ்ச்சியல்ல. இவர்களுடைய கூற்றுப்படி முதலில் வலி மறைந்துவிடுகிறது. அடுத்து கட்டிபோன்றும் உள்ள வடு மறைகின்றது. அதற்கடுத்து லிங்கத்திற்கு உரிய நீளும் தன்மை திரும்பி வரப்பெற்று வளைவு மறைகின்றது. இறுதியில் லிங்கம் தன்னுடைய முழுமையான இயற்கை உருவை திரும்பப் பெறுகின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் இது மிக மிக அதிசயமான ஒன்றாகும். அப்படியானால் இதற்குரிய வைத்திய முறைகள் என்ன? ஆய்வு என்ன? அடுத்து சிந்திப்போம்.
கால(ன்)ம் வெட்டிய காமக்குழி! - மருத்துவர். வி.என். இராஜசேகரன்
“மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்கு மென்று.
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று”!
என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் கூறும்.
அப்படிப்பட்ட பாவப்பட்ட தம்பதிகள் எனக்குப் பழக்கமாயினர். அவர்களைப் பரிசோதித்தபோது இவர்களா இப்படி அல்லது இவர்களுக்குமா இப்படி என்று என்னால் துக்கப்படாமல் இருக்க முடியவில்லை.
அவர் ஒரு பொறியாளர். அமெரிக்காவில் சென்று செட்டிலாகி வாழ்பவர். அவர் பொறியாளர் மட்டுமல்ல நல்ல நெறியாளரும் கூட. வாழ்வதெல்லாம் வள்ளலார் போல் தான் தேடிய செல்வங்களில் பெரும்பங்கை வாழ்வில் ரணப்பட்டவர்கள் நல் வாழ்விற்காக வழங்குபவர். வள்ளலார்போல் திருமணமே வேண்டாமென்று வெறுத்த அவரை அப்படியே விட்டிருக்கலாம். மாறாகத் திருமணம் என்ற பந்தத்திற்குள் தன் தாயாரால் தள்ளப்பட்டார்.
அன்பு மகன், ஆசை மகன், செல்வமகன் அதுவும் சீமானாய் இருப்பவனை சிவனே என்று எந்தத் தாய் இருக்க விடுவார்? மருமகளைப் பார்க்க வேண்டும். மனதார ரசிக்க வேண்டும். பேரன் பார்க்க வேண்டும், பேர்த்தி சொல்கேட்கவேண்டும் என்று இவரை அசத்திவிட்டார்.
பொறியாளர் தன் நெறிகளில் ஒன்றை மீறி மண வாழ்க்கைக்கு சம்மதித்தார். தாய்க்கு ஆனந்தம் தாங்கவில்லை. தமிழ்ப் பண்பாடுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர் மணமகளாய் வந்தார். இல்லறத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. “இன்பமே அன்றித் துன்பம் இல்லை” என்றுதான் வாழ்க்கைசுகமாக ஓடியது. ஒரே ஒரு குறை. தங்களுக்கென்று வாரிசு உருவாகவில்லை என்பது தான் அவர்களை உறுத்தியது. ஆவர்களை விட அவரின் தாய்க்குத்தான் மிகப்பெரும் கவலை. அந்தக் கவலையில் கண் மூடிவிட்டார்.
பொறியாளர் தம்பதிகள் இருவரும்
“நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொருவண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி” என்று வாலியின் கவிதையாய் வாழ்ந்து வந்தனர்.
குழந்தை இல்லாக் குறை என்பது தசரதனையே வருத்தியுள்ள போது சாமான்யர்களை வருத்தாதா? இவர்களின் மனதுக்குள்ளும் அது உறுத்தலாகத்தான் இருந்தது. அவர்கள் தமிழகம் வந்தால் என்னைச் சந்திக்காமல் போவதில்லை. அத்தோடு உடற்பரிசோதனை செய்யவும் தவறுதில்லை. இந்த முறையும் அப்படி வந்த போதுதான் அந்த அதிர்ச்சி எனக்குள் காத்திருந்தது. அவர் அமெரிக்காவிலிருந்து வரும் போதெல்லாம் எனக்கென்று ஏதாவது பரிசுப்பொருள் வாங்கி வருவார். இந்த முறை அவர் பரிசுப் பொருளோடு தன் உடலுக்குள் ஹெச்.ஐ.வி. தொற்றையும் வாங்கி வந்திருந்தார்
ஒரு மருத்துவரான என்னால் இதனை சீரணிக்க முடியவில்லை. காரணம் ஒரு நெறியின் படி வாழ்ந்தவர். தவறி இருக்க வாய்ப்பில்லை. தவறி இருக்காமல் ஹெச்.ஐ.வி தொற்றவும் வாய்ப்பில்லை. என்ன டாக்டர் ரிப்போர்ட்டெல்லாம் எப்படி என்றார். நான் சொல்ல முடியாமல் சொன்னேன். எங்கே எப்படி என்றேன். அவரும் யோசித்து யோசித்து தேடித் தேடி ஞாபகப்படுத்தி சொன்னார்.
திருமணம் என்பது புனிதமானது என்பது தெரியும். அதேசமயத்தில் வருபவளை திருப்தியாக வைத்துக்கொள்ளவும் வேண்டும் என்பது தெரியும். ஒரு வற்புறுத்தலுக்காக கட்டிக்கொண்ட வள்ளலார் தன் மனைவியைத் தீண்டவே இல்லை, அந்த வைராக்கியம் அவரைப் பின்பற்றிய எனக்கு இல்லாமல் போனது. தன் மனைவி தன்னைப் பற்றிய உண்மை நிலையை அவர் உணரும் வண்ணம் அந்த மகான் எடுத்துரைத்து உலகின் ஒளியாகத் திகழ்ந்தார்
அடியேன் திருமணம் மறுத்துத் தான் இருந்தேன். தாயின் நிர்ப்பந்தத்தால் மண வாழ்வின் ஒப்பந்தம் போட்டேன். ஒப்பந்தத்தில் உடன்படுபவள் எந்த விதத்திலும் உணர்ச்சிக்காக ஏங்கக் கூடாது என்ற உந்துலால் என் உணர்வுகளை அதற்கு ஏற்ற ஆண்மையினை தெரிந்துகொள்ள ஒரு குளத்தில் குளிக்கும் கட்டாயம் ஏற்பட்டது.
நல்ல குளம் என்று நினைத்துதான் மூழ்கினேன். இப்போது வாழ்க்கையே மூழ்கிவிட்டது. நான் எனக்கும் துரோகம் செய்துள்ளேன். என் மனசாட்சிக்கும் துரோகம் செய்துள்ளேன். என் குருநாதரின் கொள்கைக்கும் துரோகம் செய்துள்ளேன். கூட வந்துள்ள மனைவிக்கும் துரோகம் செயதுள்ளேன். இதனால் இயற்கை எனக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கண்ணீர் சிந்தினார்.
பயப்படாதீர்கள், இப்போது தான் தொற்றி இருக்கிறது. ஒழுங்காக மருந்து எடுத்துகொண்டால் வாழ்க்கையை ஓரளவு வாழலாம். பயம் மட்டும் வேண்டாம். இன்னும் பத்தாண்டுகளுக்கு உங்களுக்கு உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தயங்கித் தயங்கி இன்னொன்றும் சொன்னேன். சொல்லுங்கள் டாக்டர் என்றார். இது போன்ற நேரங்களில் மனைவியையும் பரிசோதிப்பது தான் உகந்தது என்றேன்.
மறுத்தும் மறுக்காமல் மனதில்லாமல் அன்று மறு நாள் மனைவியை அழைத்துவந்தார். பரிசோதனையில் அவருக்கும் இவர் தந்த பரிசு ஒட்டியிருந்தது. என்ன செய்ய விதியே என்று அழுதனர். சங்க இலக்கியத்தில் வரும் பெண்மானும் பிணைமானும்போல் வாழ்ந்த இல்லறத்தில் இப்படிக் கீறல் விழுந்துவிட்டது. இருவருமே பொறியாளர்கள், படித்தவர்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். நான் |
|
|
|