பாலியல் சந்தேகங்கள்
என் ஆண் குறி சிறியதாய் உள்ளது. அதை பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?
உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.
நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு குறித்து வருந்துகிறார்கள். மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.
முதலில் ஆண்குறிகளின் அளவு குறித்து சில உண்மைகளை நாம் பார்ப்போம். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்கிறது. நீளமான அல்லது தடிமனான குறியினால் மட்டும் உங்கள் இணையை திருப்திப்படுத்திவிட முடியாது என்பதே உணமை. உங்கள் இணையின் தேவை அறிந்து, உங்கள் இணையின் உடல் அறிந்து செய்யும் சேவைகளே முழு திருப்தி தருவதாக பெரும்பாலான பெண்கள் ஒரு கணக்கெடுப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி: மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
பதில்: மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.
இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்.
முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?
பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும்.
மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது.